Monday, October 12, 2009

கோதுமை மணிகள்

புதிதாய் திருமணம் முடித்த ஒரு தம்பதியர்.
கணவன் அடிக்கடி ஒரு சிறிய பெட்டியை எடுத்துப் பார்ப்பதும் யாருக்கும் தெரியாமல் பத்திரமாய் பூட்டி வைப்பதுமாய் இருக்கிறான்.
ஒரு நாள் இதை கவனித்து விட்ட மனைவி கேட்டாள்
'அந்த பெட்டியிலே என்னங்க இருக்கு.இப்படி பத்திரப் படுத்துகிறீர்கள்'
முதலில் தயங்கிய கண்வன் பின்பு சொன்னான்
'என்னைத் தப்பாக நினைக்காதே நம் திருமணத்திற்கு முன்பு நான் கொஞ்சம் சபல புத்திக்காரனாய் இருந்தேன்.
நான் தவறு செய்யும் போதெல்லாம் இந்தப் பெட்டியில் ஒரு கோதுமை மணியைப் போட்டு வைப்பேன்.அதைத்தான் அடிக்கடி எடுத்துப் பார்த்தேன்' என்றான்.
மனைவி அவசரமாக அந்தப் பெட்டியை வாங்கி திறந்து பார்த்தாள்.
உள்ளே இரண்டே இரண்டு கோதுமை மணிகள் இருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டபடியே,
'போகட்டும் விடுங்கள் ஏதோ சபலபுத்தியில் இரண்டு முறை தவறு செய்து விட்டீர்கள்.நானும் மன்னித்து விடுகிறேன் 'என்றாள்.
கணவன் 'இல்லையில்லை இந்த பெட்டி நிறைய கோதுமை இருந்தது.நம் கல்யாணத்திற்கு முதல் நாள்தான் ஒன்றரை கிலோ எடைக்குப் போட்டேன் 'என்றான்.

3 comments:

விஜயசாரதி

லீமா..உங்கள் புலம்பல்கள் நகைச்சுவையானவை. ஒன்றரை கிலோ சரிதான்..மனைவியின் பெட்டியை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே தாங்கள்..

லீமா

;(( அவிங்க ரொம்ப நல்லவங்கங்க

கண்ணகி

:)