Sunday, February 20, 2011

பிள்ளையார்கள்

ஆற்றில் போடாமல்

வீட்டில் எடுத்து வைத்தால்

பிள்ளை பிறக்குமாம்

பரண் முழுக்க‌

சிறைப்பட்ட‌

பிள்ளையார்கள்

Sunday, March 14, 2010

அழகைத் தேடி

மூல்தானி மட்டி
மூலிகைச் சாறுகள்
பாலாடையும் சேர்த்து
பன்னீரில் முகம் கழுவ
ஆயிரம் குறிப்புகள்
அழகைத் தேடி
நமக்குள்ளே
அழகின் மூலதனம்
முகத்தோடு மனமும்
அழகாகும் மந்திரம்
இதழ் விரியும் புன்னகை

Sunday, February 7, 2010

ஹைக்கூ

துரத்தி வந்த
ஆண் சிங்கங்களைக் 
 கிழித்துக் குதறியது காளை
மஞ்சு விரட்டு

ஜாதி மத பேதமில்லை
பிடித்தவனுக்கு மாலையிடலாம்
சுயம்வரம்

 பிடித்துப் போனதற்கான
காரணங்களைத் தேடியது
காதல்

Sunday, January 3, 2010

அடுத்த அவதார்கள்

மக்கள் எவ்வளோ பாஸ்டா இருக்காங்க பாருங்க.அடுத்த அவதாருக்கு ஆளுங்களை புக் பண்ணிட்டாங்க

 

மோனலிஸா
 
ஜெஸிக்கா

 
பமீலா

 

 

Sunday, November 1, 2009

க.மு.க.பி

ஒரு காதலனும் காதலியும் கல்யாணத்திற்கு முன்பு இப்படி பேசினால் கல்யாணம் முடிந்த பின்பு அவர்கள் எப்படி பேசியிருப்பார்கள்????
எதாவது தோன்றுகிறதா?யோசிங்க


பெண்::என்னை பிரிந்து சென்றுவிடுவீர்களா?

ஆண்::அதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது அன்பே

பெண்::என்னைக் காதலிக்கிறீர்கள் தானே

ஆண்: நிச்சயமாக இப்போதும் எப்பொழுதும்

பெண்:என்னை ஏமாற்ற எண்ணுகிறீர்களா??

ஆண்::இல்லை இல்லை ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாய்

பெண்::என்னை முத்தமிடுவீர்களா?

ஆண்::ஓ எனக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம்

பெண்:என்னை அடிப்பீர்களா?

ஆண்:ச்சே நீயென்ன முட்டாளா இப்படிக் கேட்கிறாய்

பெண்: உங்களை நம்பலாமா??

ஆண்::என்னம்மா

பெண்:அன்பே

ஹூம்..???
சரி அப்படியே கீழிருந்து மேலாக உல்ட்டா பண்ணி கேள்வி- பதிலைப் படித்துப் பாருங்கள் :)) இப்ப புரியும்

Monday, October 12, 2009

கோதுமை மணிகள்

புதிதாய் திருமணம் முடித்த ஒரு தம்பதியர்.
கணவன் அடிக்கடி ஒரு சிறிய பெட்டியை எடுத்துப் பார்ப்பதும் யாருக்கும் தெரியாமல் பத்திரமாய் பூட்டி வைப்பதுமாய் இருக்கிறான்.
ஒரு நாள் இதை கவனித்து விட்ட மனைவி கேட்டாள்
'அந்த பெட்டியிலே என்னங்க இருக்கு.இப்படி பத்திரப் படுத்துகிறீர்கள்'
முதலில் தயங்கிய கண்வன் பின்பு சொன்னான்
'என்னைத் தப்பாக நினைக்காதே நம் திருமணத்திற்கு முன்பு நான் கொஞ்சம் சபல புத்திக்காரனாய் இருந்தேன்.
நான் தவறு செய்யும் போதெல்லாம் இந்தப் பெட்டியில் ஒரு கோதுமை மணியைப் போட்டு வைப்பேன்.அதைத்தான் அடிக்கடி எடுத்துப் பார்த்தேன்' என்றான்.
மனைவி அவசரமாக அந்தப் பெட்டியை வாங்கி திறந்து பார்த்தாள்.
உள்ளே இரண்டே இரண்டு கோதுமை மணிகள் இருப்பதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டபடியே,
'போகட்டும் விடுங்கள் ஏதோ சபலபுத்தியில் இரண்டு முறை தவறு செய்து விட்டீர்கள்.நானும் மன்னித்து விடுகிறேன் 'என்றாள்.
கணவன் 'இல்லையில்லை இந்த பெட்டி நிறைய கோதுமை இருந்தது.நம் கல்யாணத்திற்கு முதல் நாள்தான் ஒன்றரை கிலோ எடைக்குப் போட்டேன் 'என்றான்.

Saturday, September 19, 2009

IX VIII IV II III IV VIII V VIII IX

இந்த காலத்துப் பசங்க எப்பெடியெல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்க.
என் உறவினர் பையன் ஒருவன் அவனுடைய நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு நோட்டைக் காண்பிக்க அவனும் அதைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அவர்கள் போன பிறகு அந்த நோட்டைப் பார்த்த போது அதில் இப்படிIX VIII IV II III IV VIII V VIII IX னு எழுதியிருந்தது.
நானும் இது என்னன்னு யோசிச்சேன்.எதாவது புதிர் கணக்கா என்று அவனிடம் கேட்டபோது நீங்க சொல்வது போல புதிர் இல்லை.
ஆனால் புதிர் மாதிரி என்னவென்னறு கண்டு பிடிங்க பார்ப்போம்என டைம் கொடுத்தான்.
பந்தயம் 10 தோப்புக் கரணம்.முட்டி மோதி யோசித்தும் முடியாமல் சரண்டர்.
அவன் சொன்ன புதிலைக் கெட்டதும் ச்சே இதானா என்று இருந்தது.
இருந்தாலும் இந்த காலத்துப் புள்ளைங்க எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க.
பந்தயத்துல தோத்துப் போயாச்சு.
பிறகு தோப்புக் கரணம் போட்டேனோ என சந்தேகமா?
தோப்புக் கரணத்துக்குப் பதில் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்துட்டோமில்ல.