Thursday, September 17, 2009

நினைவுகள்


சத்தமின்றி வரும் பூனையின்
பாதச்சுவடுகளைப் போல
இருப்பைக் காட்டாத சில்வண்டின்
ரீங்காரம் போல
காற்றில் கலந்து வரும்
மல்லிகையின் வாசம் போல
முகம்பாரா தொலைவினில்
இருந்தாலும்
தூக்கம் கலைத்து
அலைக்கழிக்கும்
உன் ஞாபகங்கள்